சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு!

ஞாயிறு, 20 ஜூன் 2021 (20:14 IST)
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். நாளை முதல் தொடங்கும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன என்பதும் குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சென்னையில் மெட்ரோ ரயில் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் நாளை முதல் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை செயல்படும் என்றும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்