திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (19:16 IST)
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், 80% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது
 
மேலும் அன்பழகன் அவர்களுக்கு கல்லீரல் பிரச்சனையும் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் அவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்