திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி...தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி !

புதன், 3 ஜூன் 2020 (22:42 IST)
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி –செய்யபட்டுள்ளதை அடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான கெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவந்தார்.

இந்நிலையில், இன்று முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக்  கொண்ட அவருக்கு இன்று கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்