சென்னை புளியந்தோப்பு பகுதியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, அந்த நிகழ்ச்சிக்கு வந்த மேயர் பிரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். புகார் குறித்தும், ப்ளீச்சிங் பவுடரின் தரம் குறித்தும் உரிய விசாரணை நடைபெறும்,” என தெரிவித்தார்.
ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை முன்னிட்டு, மேயர் பிரியா உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.