18 ஆவது ஓவரில் அந்த அணி 175 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் 19 ஆவது ஓவரை சஹால் வீசிய நிலையில் அந்த ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம். அவரின் இந்த ஓவரால் சென்னை அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி இலக்கை 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.