இன்று ஒரே நாளில் ரூ.1600க்கு மேல் குறைந்த தங்கம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva

வியாழன், 1 மே 2025 (10:00 IST)
தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.205, ஒரு சவரனுக்கு ரூ.1640 வரை குறைந்துள்ளதாக வெளியான தகவல், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.74,000-ஐ கடந்ததால் சாதாரண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 
ஆனால் தற்போது, கிட்டத்தட்ட ரூ.70,000 வரை தங்கம் விலை விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த 15 நாட்களில் சுமார் ரூ.4,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,980
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,775
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,796
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,572
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,368
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,576
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்