வங்கதேசத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, அதன் பின் திருப்பூர் வந்த சயன் என்பவர் சொந்தமாக வீடு கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் சயன் என்பவர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூரை சேர்ந்த கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வீடுகள் கட்டி, அவற்றை வாடகைக்கு விட்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சயன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், சட்டவிரோதமாக 20 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர் என்றும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கு முன் வங்கதேசத்திலிருந்து வந்து, கீதாவை திருமணம் செய்து தனது மனைவியின் பெயரில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றைப் பெற்றதாகவும், இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் கிடைக்கவில்லை என்றும் சயன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக திருப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.