சென்னை மாநகரப் பேருந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் வசதிக்காக தற்போதுள்ள சில பேருந்து வழித்தட எண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அமைப்பின்படி, ஏழு பேருந்து வழித்தடங்களின் எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளன. இந்த மாற்றங்கள் மே 1 அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
ஐயப்பன்தாங்கல் - பிராட்வே செல்லும் 11ஜிஇடி பஸ், இனிமேல் 11எம் என மாற்றப்பட்டுள்ளது.
பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் 18ஏஎக்ஸ் பஸ்சின் எண் 18ஏ ஆகவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் வழித்தடம் 91கே இப்போதும் 91 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் 121எச் இடி என்ற பஸ், 170டி.எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.