ஆதார், பான் கார்டு, ரேசன் கார்டு இந்திய குடியுரிமை சான்றிதழ் அல்ல.. மத்திய அரசு அறிவிப்பு

Siva

வெள்ளி, 2 மே 2025 (13:09 IST)
ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பது அர்த்தம் அல்ல என்றும், பிறப்புச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிவர்கள் பலரும் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு வைத்திருந்து நாங்களும் இந்தியர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் ஆதார், பான், ரேஷன் கார்டுகள் குடியுரிமை ஆதாரங்கள் அல்ல என்றும் பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் சட்டபூர்வ குடியுரிமை பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் சான்றிதழ்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
எனவே ஒவ்வொரு குடிமக்களும் தங்களது பிறப்பு மற்றும் குடியிருப்பு ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஒருவேளை இந்த சான்றிதழ்கள் இல்லை எனில் நகராட்சி அல்லது மாநில ஆட்சியரின் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்