வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் 15 நிமிடங்கள் மின்சாரத்தை அணைக்கும் போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடந்த விசாரணையில், வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மின்சாரத்தை துண்டித்ததாக அவர் கூறியதைத் தொடர்ந்து, அந்த ஊழியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மே 1ஆம் தேதி, சில முஸ்லிம் அமைப்புகள் அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் 15 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கோரியிருந்தது. அந்த நாள் நாட்டின் பல நகரங்களில் 15 நிமிடங்கள் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டன.