கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது: நீதிமன்றம்.

Siva

வெள்ளி, 2 மே 2025 (13:02 IST)
எந்த ஒரு சாதியிலிருந்தவர் கிறிஸ்தவ மதத்தில் மதம் மாறியவுடன், அவர்  SC/ST வகுப்பு அந்தஸ்தை இழக்கிறார் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், SC/ST சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என நீதிமன்றம் கூறியுள்ளது.
 
2021 ஜனவரியில், பத்தாண்டுகளாக பாஸ்டராக பணியாற்றிய சிந்தாடா ஆனந்த், அக்கலா ராமிரெ மற்றும் மற்றவர்கள் தனது சாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சாண்டோலு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் SC/ST தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இதனை எதிர்த்து, ராமிரெட்டி மற்றும் மற்றவர்கள், இந்த வழக்கு செல்லாது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
தனது கட்சிக்காரர் மீது குற்றம் சாட்டியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், இந்திய அரசியலமைப்பின் 1950ம் ஆண்டு வரையறை படி, அவருக்கு SC/ST அந்தஸ்து அமலுக்கு வராது என வாதிட்டார்.
 
ஆனால் ஆனந்தின்  வழக்குரைஞர் ஈர்லா சதீஷ்குமார், தனது கட்சிக்காரர் SC சான்றிதழ் வைத்துள்ளவர் என வாதிட்டார். ஆனால் நீதிபதி ஹரிநாத், கிறிஸ்தவ மதத்தில் சாதி நிலைகள் இல்லாததால், மதமாற்றம் ஆனவுடன் SC/STஅந்தஸ்து தானாகவே முடிவடைகிறது என தெரிவித்தார்.
 
 
 பாஸ்டர் ஆனந்த் SC/ST சட்டத்தை தவறாக பயன்படுத்தி போலி புகார் அளித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போலீசார் ஆனந்தின் மத மற்றும் சாதி நிலையை சரிபார்க்காமல் வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
 
இதையடுத்து, ராமிரெட்டி மற்றும் மற்றவர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனந்தின் சாதி சான்றிதழ் பரிசீலனைக்கு உட்பட்டதாக இருந்தாலும், அது மதமாற்றத்துக்கு பிறகு அவருக்கு SC/ST சட்ட பாதுகாப்பு வழங்காது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்