என்.டி.ஏ - இண்டியா இரண்டு கூட்டணியும் வேண்டாம்.. கட்சியினர்களுக்கு மாயாவதி அறிவுரை..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (13:13 IST)
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா என்ற எதிர்க்கட்சி கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணியிலிருந்தும் விலகி நமது பலத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சியினர்  மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசினார்.  
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இண்டியா என்ற கூட்டணியில் பல கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. 
 
இந்த நிலையில் இரு கட்சியிலும் சேராமல் சில கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களின் கட்சிகள் இரு கூட்டணி மேலும் சேரவில்லை. 
 
இந்த நிலையில்  பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாயாவதி இரண்டு கூட்டணியிலிருந்தும் தனது கட்சியின் தொண்டர்கள் விலகி இருக்குமாறு தெரிவித்தார்.  
 
பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகின்றன என்றும் பல நூற்றாண்டுகள் ஆகியும் சாதி வேற்றுமை இன்னும் நீங்கவில்லை என்றும்  அவர் குற்றம் சாட்டினார். 
 
மேலும் இட ஒதுக்கீட்டில் உண்மையான பலன்களை மக்களை பெற முடியாத நிலை உள்ளது என்றும் எனவே இரு கூட்டணியிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்றும் தனது கட்சி தொண்டர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்