மீண்டும் தொடங்கும் தங்கலான் ஷுட்டிங்.. பின்னணி என்ன?

திங்கள், 2 அக்டோபர் 2023 (08:05 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளதால் இப்போது இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் கே ஜி எஃப் பகுதிகளில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த ஷூட்டிங்கில் விக்ரம் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்