பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா நிறுத்தி வைத்த நிலையில், நான்கு நாட்களில் பாகிஸ்தான் நதி வறண்டு போய், பாலைவனம் போல் காட்சி அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நதிகளுக்கு இந்தியா வழியாகத்தான் தண்ணீர் பாய்கிறது. இது குறித்த ஒப்பந்தம் கடந்த 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான நிலையில், இந்த மூன்று நதி நீரை வைத்து தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நீர் ஆதாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்ட நிலையில், தற்போது குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.