மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

Siva

புதன், 30 ஏப்ரல் 2025 (18:42 IST)
மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகள் இனி ரயில் நிலையத்தில் மதுரை மல்லிகை வாங்கி கொள்ளலாம் என்றும், இதனால் மல்லிகை பூ விற்பனை ஜோராக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
மதுரை ரயில் நிலையத்தில் புகழ்பெற்ற மல்லிகை பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகை விற்பனை செய்ய தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பூக்கடைகள் வைக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனால், மதுரையில் பிரபலமான மல்லிகை பூவை ரயில் பயணிகள் வாங்கிச் செல்லும் வகையில் இன்னும் சில நாட்களில் விற்பனை தொடங்க உள்ளது. மதுரைக்கு வரும் மக்கள், அந்த ஊரின் சிறப்பு அம்சமான மதுரை மல்லிகையை சிரமம் இன்றி வாங்க முடியும்
 
அதேபோல் அந்தந்த ஊரில் புகழ்பெற்ற பொருட்களை விற்பனை செய்ய அடுத்தடுத்து அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்