மக்களவை தேர்தல் 2024: நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..!

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (18:09 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் விறுவிறுப்பாக உள்ளன.

இந்த நிலையில் இந்த தேர்தலில் திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டாலும் அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று கூறிவிட்டார்.

இருப்பினும் சில நடிகர்கள் நடிகர்கள் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தான் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர்தான் தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்