இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் சிலர் கலந்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மகாபலிபுரத்தில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு பேசினர்.
இன்று பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திண்டிவனத்தில் நடைபெறுகிறது. பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அன்புமணி உள்ளிட்ட சில நிர்வாகிகள் தாமதமாக வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பாமகவினர் இடையே பேசி வரும் ராமதாஸ் “சிங்கத்தின் கால்கள் பழுதாகாமல் இருக்கும்போது சீற்றம் அதிகமாகத்தானே இருக்கும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த சீற்றம் எனக்குள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிக்கும் வித்தைகளை சொல்லிக் கொடுத்தேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாராவது சொன்னால், அவர்கள் விரும்பியப்படியே மாற்றம் செய்யப்படுவார்கள்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K