நீலகிரி மாவட்டம் ஊட்டியில், முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "2026 மட்டும் அல்ல, 2031 மற்றும் 2036 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும்," என்றும், "திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நிலைத்து நிற்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி, உச்ச நீதிமன்றத்தில் கருத்து கேட்ட விவகாரத்தில், பிற மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் தெரிவித்தார்.