10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Mahendran

வெள்ளி, 16 மே 2025 (10:35 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இன்று  இந்த முடிவுகளை வெளியிட்டார்.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடத்தப்படும். தேர்வு அட்டவணை நாளை, மே 17 அன்று வெளியிடப்படும்” என்றார்.
 
மேலும் 10ஆம் வகுப்புக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 11ஆம் வகுப்பிற்கான முடிவுகள் மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
 
மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோன்றியவர்களில் 98.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது அந்த மாவட்டத்தில் கல்வித் தரம் உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்