தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இனி வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வரும் நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில், "கோடை காலம் இன்றுடன் முடிகிறது. இன்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு தனித்துவமான ஆண்டாக, வெப்ப அலை இல்லாத ஆண்டாக இருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.
"இந்த ஆண்டு மே மாதத்தில், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ்-ஐ ஒரு நாளும் தாண்டவில்லை. கடந்த 25 ஆண்டுகளில், இது போல் மூன்று முறை நடந்துள்ள நிலையில், இது நான்காவது முறை," என்றும் அவர் கூறியுள்ளார்.