தாயையே குத்திக் கொன்ற இளைஞர்… போதையில் நடந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:25 IST)
சென்னையில் போதையில் வந்த மகனுடன் தாய் சண்டை போட்ட நிலையில் வாக்குவாதம் முற்றி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சென்னை வேள்ச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. அவரின் மகன் மூர்த்தி. மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது அம்மாவிடம் சண்டை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் சாப்பாடு போட சொல்லி லட்சுமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் உணவு போடாத தாயை கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து லட்சுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக தகவல் அறிந்த போலிசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூர்த்தியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்