மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் எமிரேட்ஸ்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:14 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்கள் நாட்டின் முதலீட்டாளர்களுக்கு கோல்டன் விசா என்ற கௌரவத்தை அளித்து வருகின்றன.

கோல்டன் விசாவைப் பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த நாட்டுக்கு சென்றுவரலாம். அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள். இதுவரை இந்த கோல்டன் விசாவை 6800 பேர் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மலையாள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், நடிகையும் ஆர்.ஜே-வுமான நைலா உஷா ஆகியோர் இந்த 'கோல்டன் விசா' கௌரவத்தை பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்