போதை மாத்திரை என கூறி தூக்க மாத்திரை கொடுத்த நபர்.. மருத்துவமனையில் 4 சிறுவர்கள்..!

Webdunia
திங்கள், 29 மே 2023 (07:38 IST)
போதை மாத்திரை என்று கூறிய சிறுவர்களிடம் தூக்க மாத்திரையை விற்ற மர்ம நபரால் நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 தமிழகத்தின் பல இடங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பழக்கம் பரவி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தென்காசியில் காசிராஜன் என்பவர் போதை மாத்திரை என்று கூறி நான்கு சிறுவர்களுக்கு தூக்க மாத்திரையை கொடுத்துள்ளதாக தெரிகிறது. போதை மாத்திரை என்று நினைத்து அந்த தூக்க மாத்திரையை சாப்பிட்ட சிறுவர்கள் உடல்நலம் பாதிப்படைந்ததன் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
 இந்த நிலையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை என்று கூறி தூக்க மாத்திரை கொடுத்த காசிராஜன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவர்களுக்கு இலவசமாக போதை மாத்திரைகொடுத்து அடிமையாக்கி அதன்பின் அவர்களிடம் அதிக விலைக்கு போதை மாத்திரையை காசிராஜன் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்