டெல்லியில் மல்யுத்த வீரர்கள் கைது: தலைவர்கள் கண்டனம்..!

திங்கள், 29 மே 2023 (07:17 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் நேற்று புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
தமிழக முதல்வர் ஸ்டாலின்: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?
 
பிரியங்கா காந்தி: மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது. மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை. அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது
 
ராகுல் காந்தி: முடிசூடும் விழா முடிந்தது; மக்களின் குரல்களின் நசுக்கும் பணி தொடங்கியது!
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்