பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு தூவப்பட்டதா? திருவள்ளூரில் பரபரப்பு..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:34 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு தூவியதாக செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக நோய் தொற்று பரவாமல் இருக்க சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் ப்ளீச்சிங் பவுடரை தூவி வருகின்றனர் 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு தூவி உள்ள மக்கள் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் இது குறித்து பேரூராட்சி செயல் தலைவர் பாஸ்கர் என்பவர் விளக்கம் அளித்தபோது ’பிளீச்சிங் பவுடருடன் சுண்ணாம்பு கலந்து வீதியில் தூவ மூட்டையை கொடுத்து அனுப்பியதாகவும் தங்களுக்கு சுண்ணாம்பு சப்ளை செய்த ஏஜென்சி, மைதா உள்ள கவரில் சுண்ணாம்பு கலந்து அனுப்பியதால் அதனை மைதா என்று மக்கள் தவறாக நினைத்து விட்டார்கள் என்றும் ஆனால் அது உண்மையில் பிளீச்சிங் பவுடர் தான் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்