குறிப்பாக வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, வடசென்னை ஆகிய பகுதிகளில் வீடுகளை பொதுமக்கள் சுத்தம் செய்ய முடியாமல் தனியார் நிறுவனங்களை அணுகிய நிலையில் அவர்கள் அதிக கட்டணங்களை வசூலித்து வருவதால் இந்த நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கருதப்படுகிறது
ஆனால் இது குறித்து வீடுகளை சுத்தம் செய்யும் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறிய போது ஒரே நேரத்தில் பல வீடுகளில் சுத்தம் செய்ய அழைப்பு வந்ததை அடுத்து தற்காலிக ஊழியர்களை அதிகம் பணியமர்த்தி உள்ளோம் என்றும் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளதால் கட்டணமும் அதிகமாக வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.