தரிசு நிலத்தையெல்லாம் அரசியல்வாதிகள் பட்டா போட்டுடுறாங்க! – மதுரை கிளை நீதிமன்றம் பளார்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:29 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மக்களுக்கான பொது பிரச்சினைகள் குறித்த பல்வேறு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் கருத்து கூறிய மதுரை கிளை நீதிபதிகள் தரிசு நிலங்களை கண்டால் வெள்ளை சட்டை அரசியல்வாதிகள் பட்டா போட்டு விடுகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ள நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்