முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை!
மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது எடுத்து ஏரியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். நேற்று செம்பரபாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது என்பதும் இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விட்டது என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக கிளி ஆற்றின் கரையோரம் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்