உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெள்ளம் நிலச்சரிவு

வியாழன், 21 அக்டோபர் 2021 (10:04 IST)
நேபாளத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கன மழை ஏற்படுத்திய வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இதனால் உருண்டு வந்த பாறைகள் மோதி பல வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அதேபோன்று கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.
 
உத்தரகாண்டில் புதன்கிழமையன்று ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் புகழ்பெற்ற சுற்றலாத் தளங்கள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மதம் மற்றும் சுற்றுலா சார்ந்த செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரிஷிகேஷில் கங்கை நதி கரைபுரண்டு ஓடுகிறது.
 
மேலும் அம்மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டமான நைனிட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வழக்கத்தைவிட தீவிரமாக மழை பெய்துள்ள போதும் அங்கு மழையின் தீவிரம் குறைய தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் நேபாளத்தில் மழை குறைவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்