தமிழகத்தில் ஒமிக்ரான் சோதனை நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (10:32 IST)
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் சோதனை மேற்கொள்வதை நிறுத்திவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நபர்களில் ஒமிக்ரான் அறிகுறி உள்ளவர்களது மாதிரிகள் மட்டும் ஒமிக்ரான் சோதனைக்காக ஆய்வகம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “தமிழகத்தில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதில் 85 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறது. ஒமிக்ரான் சோதனைக்கு மாதிரிகளை அனுப்பி அவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா என்ற முடிவு வெளியாவதற்குள் பாதிக்கப்பட்டவரே குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடுகிறார். எனவே தமிழகத்தில் ஒமிக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்