வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (08:42 IST)
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியை உற்று நோக்கி வருவதாகவும் அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்பதை குறித்து   கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்