அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:42 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே நவம்பர் 15ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கரூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்