சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (12:26 IST)
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக நிர்மலா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணிப்பாற்றி வந்தார். இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் நேற்று பணிக்கு வந்த நிலையில் இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி அவரது அறையில் சென்று பார்த்தபோது நிர்மலா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிர்மலா கடந்த சில நாட்கள் ஆக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரி நிர்மலா வரும் டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்