சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் 3 பயணிகளிடமிருந்து 64 லட்சத்து 2000 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

J.Durai

வியாழன், 5 செப்டம்பர் 2024 (20:29 IST)
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்க்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு மலேசியா சிங்கப்பூர் சவுதி போன்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது .
 
விமானங்களில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் அயல்நாட்டு கரன்சிகளை  கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்தும் வருகின்றனர் .
 
இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான மூன்று பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
 
அப்போது அந்த 3 பயணிகள் தங்கள் உடமைகளில் தங்கத்தை கியரில் மறைத்து வைத்து  கடத்தி வந்தது தெரிய வந்தது .
 
இந்த தங்கம் ரூபாய் 64 லட்சத்தி 2000 மதிப்புள்ளது எனது தெரிய வந்தது .
 
தங்கத்தை பறிமுதல் செய்த சுகத்துறை அதிகாரிகள் அந்த 3 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்