பெரியாருக்கு வாழ்த்து சொல்றதுல என்ன தயக்கம்! – எல்.முருகனால் பாஜக அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (13:53 IST)
திராவிட இயக்க நிறுவனரான பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று பெரியார் பிறந்தநாளும், பிரதமர் மோடி பிறந்தநாளும் அவர்களது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரின் தலைவரை மற்றொருவர் குறை கூறியும், திட்டியும் ட்விட்டரில் பதிவிட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் பொதுவாகவே பாஜக பிரமுகர்கள் திராவிட கட்சி சார்ந்த பெரியார் உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்து பதிவிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வரும் சூழலில் பாஜக தமிழக தலைவர் பெரியார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பாஜகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள எல்.முருகன் “சமூக நீதிக்காக போராடியவர் தந்தை பெரியார். அவருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என கூறியுள்ளார். எல்.முருகன் வாழ்த்து கூறியிருப்பது அரசியல் அனுகூலத்திற்காக என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழ தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்