இந்திய பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்று செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேகுகளும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் பலர் இனிப்புகள் வழங்கியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் “நமோ ஆந்தம்” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.