நளினியை விடுவிப்பதில் தவறில்லை - கே.எஸ். அழகிரி தடாலடி!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (12:24 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி.

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை அளித்தது.
 
அதை தொடர்ந்து சிறை தண்டனையில் உள்ள நளினி, ரவிச்சந்திரனும் தங்களை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போல அதிகாரத்தை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் செய்த குற்றத்தை விட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை என்று குறிப்பிட்டு சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கே.எஸ். அழகிரி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்