நளினிக்கு 5வது முறையாக பரோல் நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு
வியாழன், 26 மே 2022 (22:20 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஐந்தாவது முறையாக பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஏற்கனவே நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஐந்தாவது முறையாக மேலும் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவின்படி நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் பேரறிவாளனை அடுத்து நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது