நளினி கணவர் முருகன் விடுதலை: வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், 24 மே 2022 (16:32 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினியின் கணவர் முருகன் அனுமதியின்றி வெளிநாட்டு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் 
 
மத்திய சிறையில் இருந்து அனுமதி இன்றி வெளிநாட்டுக்கு வீடியோ காலில் பேசியதாக முருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் வேலூர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசியதாக பதிவான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் குற்றவாளி என்பதால் சிறையில் தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்