பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நிலைமைகள் மிகுந்த பதற்றமானதாக மாறியுள்ளன.
நேற்று, பாகிஸ்தான் ஒருசேர பல மாநிலங்களை குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை குறிவைத்து தாக்கியது. இந்த பெருந்தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
மேலும், பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு ஆகிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றது. ஆனால், இந்த ட்ரோன்கள் எல்லாம் இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பால் வானிலேயே தடுத்து அழிக்கப்பட்டன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை நோக்கியும், ஜம்மு விமான நிலையத்தையும் குறிவைத்து தற்கொலை ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ட்ரோன்களையும் இந்திய வான்படை வீரர்கள் முற்றிலும் அழித்து விட்டனர். இதில் இருந்து பாகிஸ்தானை இந்தியா லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறது என்பது தெரிய வருகிறது.