முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ஆம்தேதி காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் இக்கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும் அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும்போது விபத்திற்குள்ளாகி உயிரிழந்தனர். இந்த வழக்கு குறித்து தான் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.