மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

Siva

வெள்ளி, 28 ஜூன் 2024 (15:29 IST)
சென்னையில் வீடியோ காலில் பேசி முடித்ததும் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற 25 வயது வழக்கறிஞர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது
 
இதையடுத்து அவரது மனைவி நந்தினி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து சதீஷ் தனது மனைவியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் நந்தினி திட்டவட்டமாக முடியாது என கூறியதை அடுத்து மன வேதனை அடைந்த சதீஷ் மனைவிக்கு மீண்டும் வீடியோ கால் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த மனைவி அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்தபோது கதவு உள்பக்கமாக தாலி கொண்டு இருந்ததை அவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானதை அடுத்து அவரது மனைவி நந்தினி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்