ஒரு மாத பச்சிளங்குழந்தை மர்ம மரணம்.. நாய் கடித்ததா? கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (13:48 IST)
கடலூர் அருகே திட்டக்குடி என்ற பகுதியில் ஒரு மாத பச்சிளம் குழந்தை மர்மமாக மரணம் அடைந்ததை அடுத்து அந்த குழந்தை நாய் கடித்து இறந்ததா அல்லது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியில் சக்திவேல் - நந்தினி தம்பதியின் ஒரு மாத குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென குழந்தை அழுதது. குழந்தையின் அழுகுரல் கேட்டு நந்தினி வேகமாக வந்து பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்ததாக தெரிகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்ற போது மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்து ஏற்கனவே குழந்தை இறந்து விட்டது என தெரிவித்தனர். இதனை அடுத்து நந்தினி கதறி அழுதார்.

குழந்தை தொட்டில் அருகே நாய் ஒன்று இருந்ததாகவும் அந்த நாய் தான் குழந்தையை கடித்து இருப்பதாகவும் நந்தினி கூறிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை நாய் கடித்ததாக தாயார் தெரிவித்தாலும் குழந்தையின் கழுத்தில் இறுக்கிய அடையாளங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்