குப்பையில் கிடக்கும் ஸ்மார்ட் கார்ட்: வங்கி அதிகாரிகள் அலட்சியம்

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (09:13 IST)
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஸ்மார்ட் கார்டுகள் அலட்சியமாக குப்பையில் வீசப்பட்டுள்ளது. 
 
திண்டுக்காலில் மத்திய அரசு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் ஸ்மார்ட் கார்ட் குப்பையில் வீசப்பட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பயிர்கடன், காப்பீடு போன்றவற்றில் பயன்பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. வங்கி மூலம்தான் இந்த ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 
 
இந்நிலையில், கன்னிவாடி கனரா வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 200-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சியான மக்கள் வங்கி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர். 
 
ஆனால், வங்கி தரப்பில் இருந்து சரியாக பதில் அளிக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்