கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

Mahendran

சனி, 26 ஏப்ரல் 2025 (10:16 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கோவை வரவிருக்கும் நிலையில், அவருக்கு தொண்டர்கள் மேள தாள வரவேற்பு அளிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெற இருப்பதை அடுத்து, இந்த இரண்டு நாட்களிலும் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். மேலும், கோவையில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கோவை செல்வதற்காக விஜய் சென்னை நீலாங்கரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார். விஜய் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
மேலும், கோவை விமான நிலையத்தின் வெளியே, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மேளதாளத்துடன் அவரை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வரவிருக்கும் விஜய்யை பிரமாண்டமான முறையில் அவர்கள் வரவேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கட்சி ஆரம்பித்த பின்னர், முதல் முறையாக சென்னைக்கு வெளியே விஜய் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து, இனி அடுத்தடுத்து பல கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்