ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட் இந்த சம்பவம் தீவிரவாதிகள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனைக் கெடுக்கனும் இப்படி செய்கிறார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த மாதிரி மறுபடி செய்யனும் என்று அவர்கள் இனி கனவில் கூட நினைக்கக்கூடாது என்று கூறினார்.