மூன்றாவது குழந்தைக்கு ஆசைப்படும் கவர்ச்சி நடிகை...

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (18:42 IST)
அமெரிக்க தொலைக்காட்சிகளில் ரியாலிட்சி ஷோ மூலம் அங்குள்ள மக்களிடம் பிரபலமானவர் கிம் கர்தாஷியன்.


 

 
இவர் பிரபல பாடகர் கான்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நார்த் என்ற மகளும், செயிண்ட் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மூன்றாக ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கிம் கர்தாஷியனுக்கு வந்துள்ளது. சமீபத்தில் இதை அவர் விளம்பர வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இதற்கு முன் நடந்த 2 பிரசவங்களுமே உங்களுக்கு சிக்கலாக இருந்தது. எனவே, மூன்றாவது குழந்தை வேண்டாம் என மருத்துவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். 
 
ஆனால் அது பற்றியெல்லாம் கிம் கர்தாஷியன் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. சமீபத்தில் இவர் பாரீஸ் நகர் சென்றிருந்த போது, கொள்ளையர்களிடம் சிக்கி வைர நகைகளை இவர் பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்