ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக, துணை சபாநாயகர் தம்பிதுரை சமீபத்தில் அங்கு சென்றார்.
ஜெ.வின் மரணம் தொடர்பாக ஏற்கனவே, சசிகலாவின் குடும்பத்தினர் மீதும், அவரின் ஆதரவாளர்கள் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், காரில் வந்த தம்பிதுரையை ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தனர். இதைக் கண்டு தம்பிதுரை அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும், எப்படியோ சமாளித்து அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார்.
தம்பிதுரையை மக்கள் திட்டித் தீர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.