மெகா ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய குஷ்பு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:17 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது.

இப்படத்தின் டீசர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆச்சார்யா படத்திற்கு கவலையான விமர்சனம்  கிடைத்த நிலையில், காட்பாதர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று  மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில்.   மிகச்சிறந்த மனித நேயமுள்ளவரும், என்  நண்பருமான சிரஞ்சீவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  உங்கள் உடல் நலம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நீண்ட ஆயுளுக்கு கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். என் அன்புடன் அரவணைப்பும் அனுப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்