சூப்பர் ஸ்டார்களிடம் ஆசி பெற்ற விஜய்தேவரகொண்டா

புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:28 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரிடம்  நடிகர் விஜய்தேவரகொண்டா ஆசி பெற்றுள்ளார்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக நடிகர் ஆர் கே சுரேஷ் பெற்றுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, பான் இந்தியா படமாக உருவாகவுள்ள  இப்படம்  ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரிடம்  நடிகர் விஜய்தேவரகொண்டா ஆசி பெற்றுள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி  நடிப்பில், மோகன் ராஜா நடிப்பில், லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வரும் ‘’காட்பாதர்’’ படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சல்மான் கான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த ஷூட்டிங்கின்போது, திடீர் விசிட் அடுத்த விஜய்தேவரகொண்டா, லைகர் பட இயக்குனர் பூரி  ஜெகன்னாத், நடிகை சார்மி ஆகியோர் மூவரும் வந்து சிரஞ்சீவி மற்றும் சல்மான் கானிடம் ஆசி பெற்றனர்.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்